Vijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் நன்கு செழித்தி வளர்ந்து வந்த மாநில மரமாக அறிவிக்கப்பட்ட பனங்கன்றுகளை மேடை அமைக்கும் நிறுவனத்தினர் பிடுங்கி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாடு மேடை அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் நன்றாக வளர்ந்த நிலையில் ஐந்து பனற்கன்றுகளை மாநாடு மேடை அமைக்கும் நிறுவனத்தினர் பிடுங்கி எறிந்துள்ளனர்.
மாநாடு திடலுக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மாநில மரமாக அறிவிக்கப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பனைமரத்தை பந்தல் நிர்வாகம் அகற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பனங்கன்றுகளை பிடுங்கி எறியாமல் கழித்து விட்டிருந்தாலே நன்றாக வளர்ந்திருக்கும் ஒரு புறம் தமிழக அரசு பனை விதைகளை நடவு செய்து பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற நிலையில் பனைங்கன்றுகள் பிடிங்கப்பட்டு தவிர்த்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக வெற்றிக்கழத்தின் லெட்டர் பேடில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் அதற்கு நேர் எதிர்மறையாக பனங்கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டுள்ளன. பனங்கன்று பிடுங்கப்பட்டுள்ளதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று விக்கிரவாண்டி வட்டாசியர் யுவராஜிடம் கேட்டபொழுது அதற்கான அனுமதி பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது தமிழக வெற்றிகழக நிர்வாகிகளிடம் கேட்டபொழுது பனங்கன்றுகள் மரக்கன்றுகளை பிடுங்க வேண்டாமென தெரிவித்திருந்தும் தங்களுக்கு தெரியாமல் மேடை அமைக்கும் நிரவாகத்தினர் பிடுங்கி விட்டதாக கூறியுள்ளனர்.