Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி தவெக கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரக பொறுப்பெற்ற பாலமுருகனுக்கு சாலையில் வரவேற்பு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவெக கட்சியை வலுப்படுத்தும் வகையில், 234 சட்டமன்ற தொகுதிகளை,  120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவை விஜய் எடுத்தார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் மற்றும் 10 நியமன உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வகையிலான முடிவை எடுத்தது நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அந்தவகையில் தவெக கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரக பொறுப்பெற்ற பாலமுருகனுக்கு போருர் டோல் பிளாசா,அம்பத்தூர் பகுதிகளில் அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து ஜேசிபி வாகனத்தில் மாவட்ட செயலாளருக்கு மலர் தூவி,சாலையில் பட்டாசு வெடித்து வரவேற்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு, அனுமதி இன்றி கூட்டம் கூடியது, மாநகர பகுதியில் அனுமதி இன்றி டிரோன் கேமரா பறக்கவிட்டது, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்தது என தவெக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரக பொறுப்பெற்ற பாலமுருகன் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளாள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர். சாலையில் உற்சாக வரவேற்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த நிர்வாகிகளால் போரூர் அம்பத்தூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola