Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!
வருகிற டிசம்பர் ஆறாம் தேதி விசிக தலைவர் திருமாவளவனும், த. வெ. க தலைவர் விஜய்யும் ஒரே மேடையில், ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேச உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது..
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கார் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளதாகவும், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட, அதனை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெற்றுக் கொள்வார் என்ற தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை ஒரே மேடையில் திருமாவளவனும், விஜய்யும் பங்கேற்றால், திமுக தலைமை அதை எவ்வாறு கையாளும் என்ற கேள்வி ஓங்கி நிற்கிறது.
அண்மையில் தமிழக வெற்றி கழக மாநாட்டில் பேசிய விஜய், விசிகவின் முக்கிய அஜெண்டாவான ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்தார். மேலும் திராவிட மாடல் அரசு என்று பெருமையாக சொல்லும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜயும் திருமாவளவனின் கைகோர்ப்பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் உடனடியாக திமுகவுக்கு சப்போட்டாக கருத்துக்களை தெரிவித்த திருமாவளவன், எடுத்த எடுப்பிலேயே 30% வாக்குகளை விஜயா வாங்கி விட முடியுமா? எம்ஜிஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுக காரர், தேர்தல் அனுபவம் உள்ளவர் என்று சொல்லி, நாங்கள் திமுக கூட்டணிகள் தொடர்வோம் என்று ஃபுல் ஸ்டாப் வைத்தார்.
எனினும் திமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற விசிக துணை பொது செயலாளர் ஆதார் அர்ஜுனாவின் கருத்தை விஜயும் பேசியதால், உண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், தமிழக வெற்றுக் கழகத்திற்கும் இடையே என்ன நடக்கிறது என்று உளவுத்துறையை ரிப்போர்ட் கொடுக்குமாறு திமுக தலைமை கேட்டதாக தகவல்கள் தெரிகிறது.
அதன் அடிப்படையிலேயே வீசிக்கா தலைவர் திருமாவளவன், த வே க தலைவர் விஜயும் ஒரே மேடையில் ஒன்றாக சந்திப்பதற்காகவே, அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றை ஆதார் அர்ஜுனா எழுதி வெளியிடும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை திமுக தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உளவுத்துறை தொடர்ந்து இவர்களின் மூவ்மெண்ட்டை கண்காணித்து வரும் நிலையில், தனிப்பட்ட முறைக்கு எங்கு சந்தித்தாலும் அது தேவையில்லாத மக்கள் ஏற்படுத்தும், அதே நேரம் புத்தக வெளியீட்டு விழா என்றால் அதை அரசியல் ரீதியிலான சந்திப்பாக பார்க்க வேண்டாம் என்று கவுண்டர் செய்யலாம், என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அனைத்திற்கு பின்னணிகளும் வீசிக்கா துணை பொதுச்செயலாளர் ஆது அர்ஜுனாவின் மாஸ்டர் மைண்ட் இருப்பதாகவும், திருமாவளவன் மற்றும் விஜய் ஆகிய இருவரிடமும் இது குறித்து தெரிவித்து ஒப்புதல் பெற்று தொலைபேசியில் அவர்கள் இருவரையும் அர்ஜுனா பேச வைத்துள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கூட்டணியில் விரிசல் விடாமல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் இன்று திமுக திட்டமிட்டு வரும் நிலையில், இந்த தகவல்கள் அனைத்துமே திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் ஆறாம் தேதி வெளியாகி வரும் தகவலின் படி உண்மைகள் விஜயும் திருமாவளவன் ஒரே மேடையில் சந்தித்தால், விசு கா தரப்பில் இருந்து என்ன காரணம் தெரிவித்தாலும் அரசியல் களத்தில் அது புயலை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.