விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
விஜய்யும் செங்கோட்டையனும் சுமார் 3 மணி நேரமாக நடத்திய ஆலோசனையில் தேர்தல் தொடர்பாக சில முக்கிய விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. முக்கிய ஆலோசனை என்றாலே ஆனந்த் இல்லாமல் நடக்காது என்று இருந்த நிலையில், செங்கோட்டையனுடன் நடந்த ஆலோசனையில் அவர் இறுதிவரை பங்கேற்கவில்லை.
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அக்கட்சித் தலைவர் விஜய்க்கு ப்ளஸாக அமைந்துள்ளது. சரியான ஐடியா கொடுப்பதற்கு ஆள் இல்லாமல் தத்தளித்து வந்த விஜய், தற்போது கட்சி நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை கேட்டு தான் முக்கிய முடிவுகளை எடுக்க ஆரம்பித்துள்ளார். ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் செங்கோட்டையன். இந்த நிகழ்ச்சியில் விஜய்யும் 30 நிமிடங்களுக்கும் மேல் பேசியது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விஜய்யும் செங்கோட்டையனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருவரும் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் முக்கியமாக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது பற்றி பேசப்பட்டுள்ளது. தேர்தலுக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலுவான கூட்டணியை அமைத்து வரும் நேரத்தில் தவெக பக்கம் கட்சிகளை இழுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த தனியாக குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் யார் யாரெல்லாம் இடம்பெறலாம் என்றும் ஆலோசனை நடந்ததாக சொல்கின்றனர்.
அடுத்ததாக ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் மக்கள் சந்திப்பை நடத்தும் யோசனையையும் செங்கோட்டையன் விஜய்க்கு கொடுத்ததாக தெரிகிறது. அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார் செங்கோட்டையன். அதோடு சேர்த்து மாற்று கட்சியில் இருப்பவர்களை தவெகவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. செங்கோட்டையனை தொடர்ந்து நிறைய பேர் கட்சிக்கு வருவார்கள் என விஜய் பேசியதன் பின்னணியிலும் இந்த காரணமே இருக்கிறது.
விஜய்யுடன் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையனும், அருண்ராஜும் கலந்து கொண்டனர். எப்போதும் விஜய் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் நேரங்களில் கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்த் உடன் இருப்பார். ஆனால் இந்த ஆலோசனை முடிவடையும் வரை அவர் அந்த பக்கமே தலைகாட்டவில்லை. அவர் அதிருப்தியில் இருக்கிறாரா அல்லது விஜௌ ஆனந்த் இல்லாமல் இந்த ஆலோசனையை மேற்கொண்டாரா என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இந்தநிலையில் பனையூர் அலுவலகத்தில் கட்சி தொடர்பான வேறு பணிகளில் இருந்ததால் ஆனந்த் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.