Vijay Sangeetha issue : சங்கீதா ஏன் வரல?அழைக்காமல் தவிர்த்த விஜய்? தீயாய் பரவும் வதந்தி
விஜய் தனது கட்சி கொடியை இன்று அறிமுகப்படுத்திய நிலையில் இதில் விஜயின் மனைவி சங்கீதா கலந்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாமீபகாலமாகவே விஜயின் நிகழ்ச்சிகளில் எதிலும் சங்கீதா கலந்துக்கொள்ளாமல் இருப்பது அவர்கள் இருவரும் பிரிந்து இருக்கின்றனரா என கேள்வி எழுந்து வந்த நிலையில் இந்த நிகழ்வு விஜயின் ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய், 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சமீப காலமாக விஜய், சங்கீதா விவாகரத்து செய்தி வெளியாகி ஏற்படுத்தி வருகிறது.
சங்கீதா சினிமா துறை இல்லை என்றாலும் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வார். விஜய்யின் பட நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் விஜய்யுடன் சங்கீதா வந்துவிடுவார். இவர் ஏற்படுத்திய பழக்கம் காலப்போக்கில் கொஞ்சம் மாறியது விஜய்யின் நிகழ்ச்சி எதிலும் கலந்துக்கொள்ளாமல் இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. அட்லீ-ப்ரியா சீமந்தம் மற்றும் வாரிசு பட ஆடியோ வெளியீட்டிற்கு வரவில்லை. இந்த சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய்யின் மனைவி சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் இருந்துள்ளார். அதனால் தான் விஜய்யுடன் சில நிகழ்ச்சிகளில் வர முடியவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது. அந்த சூழலில் தான் லியோவில் த்ரிஷா கமிட் செய்யப்பட்டார். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே இவர்களைப் பற்றிய பல வதந்திகள் உலா வந்தது. த்ரிஷாவுடன் விஜய் வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வந்ததாகவும் வதந்திகள் பரவியது. அது மட்டுமின்றி லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே விஜய்க்கும் சங்கீதாவுக்கும் விவாகரத்து நடந்து விட்டது என ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியானது. அதேபோல் விஜய்-சங்கீதா திருமண நாளன்று லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்று விஜய் சந்திப்பார் என நினைத்த நிலையில், அங்கும் விஜய் செல்லவில்லை என்று சொல்லப்பட்டது. இந்த செய்தி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவிரியில் தனது TVK கட்சியை தொடங்கினார். இதிலும் விஜயின் மனைவி கட்சி சம்பந்தபட்ட எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதிலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் கட்சி கொடி அறிமுக நிகழ்ச்சி இன்று பணையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நடப்பெற்றது. அதே நேரத்தில் அலுவலகத்திற்குள் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டனர். 200 பேர் முதல் 300 பேர் வரை பங்கேற்றனர். விஜய்க்கும் அவரது பெற்றோர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் விஜயின் தந்தை சந்திரசேகர் தாய் சோபா கலந்துக்கொண்டர். விஜயின் மனைவி சங்கீதா கலந்துக்கொள்ளாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை. இதானால் இவர்கள் பிரிந்தது உண்மைதானா..என கேள்வி எழுந்து வந்த நிலையில் இந்த நிகழ்வு விஜயின் ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியுள்ளது. வரும் 25 ஆம் தேதி விஜய்க்கு திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.