Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

Continues below advertisement

விஜய் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். எனக்கும் அந்த வீட்டில் சரி பாதி உரிமை உள்ளது என விஜய் மனைவி சங்கீதா புதிய மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய் மீது சமீப காலமாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டதாக வெளியான வழக்கு மனு, அதில் நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டது என அடுத்தடுத்து விஜய் சர்ச்சையில் சிக்கினார். இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் குடும்ப நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 

விஜய்க்கு பலமே மகளிர் வாக்குகள் தான் என்ற போதிலும் அவர் ஏன் இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்துக் கொள்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இத்தகைய விமர்சனங்களுக்கு விஜய், சங்கீதா, த்ரிஷா தரப்பு என யாருமே பதிலளிக்கவில்லை. இந்தநிலையில் மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று மகளிர் தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் இதற்கு மகளிர் தின விழாவில் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில் சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது அந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மாற்றமாக, தன்னை கணவர் விஜய்யின் வீட்டிற்குள் அனுமதிக்க உத்தரவிடக் கோரி மீண்டும் ஒரு இடைக்கால மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். 

இதில் " விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதால் தற்போது தான் சென்னையில் வசிக்க வீடில்லாம் இருக்கிறேன். நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரி பாதி உரிமை உள்ளது. எனவே விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக கேட்டால் என்னை வழக்கரிஞ்சர் மூலமாக விஜய் என்னை மிரட்டுகிறார்" நீலங்கரை வீட்டில் வசிக்கக் கூடாது என கூறுகிறார் என சங்கீதா புதிய மனுவில் கூறியுள்ளார். மேலும் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன் பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. எனவே இந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும்வரை அல்லது  விஜய் தனக்கு  மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்து தரும் வரையில் நீலாங்கரை வீட்டில் அவரை தங்க அனுமதிக்குமாறு சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார். 

படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் குழந்தைகளுக்கும் சேர வேண்டியதை நியாயமாக வழங்க வேண்டும் என சங்கீதா வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola