Udhayanidhi Stalin Vs Vijay | ”சேலத்தில் முதல் மாநாடு!உதயநிதிக்கு ஸ்கெட்ச்” விஜய் MASTER PLAN!

Continues below advertisement

உதயநிதிக்கும் எனக்கும் தான் நேரடி போட்டி என்று விஜய் சேலத்தில் தனது தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாநட்டின் மூலம் அரசியல் களத்தில் உதயநிதியிடம் நேருக்கு நேர் மோத விஜய் அடிப்போடுவதாக தவெக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது

கடந்த சில நாட்களாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அக்கட்சிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மாநாடு நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மாநாடு நடத்துவதற்காக திடலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலம் மாவட்டத்தில் நடத்துவதற்காக முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த முதல் மாநில மாநாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட திடல் அமைய உள்ளதாகவும், மாநாட்டை செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திடலானது 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதே திடலில் மாநாடு நடத்திய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். சமீபத்தில் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி இதே கெஜல்நாயக்கன்பட்டி திடலில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். எனவே வரலாற்று சிறப்புமிக்க இந்த கெஜல்நாயக்கன்பட்டி திடலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சேலம் மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எம்.ஜி ஆர் முதல் தற்போது கமல் வரை மதுரையில் கட்சியின் முதல் மாநாட்டை தொடங்கினர். இவர்கள் வழியில் விஜயும் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் தொடங்குவார் என்று பேசப்பட்டது.  

ஆனல் நடிகர் விஜய் திடீரென நீட் எதிர்ப்பு, ஒன்றிய அரசு என்றெல்லாம் பேச தொடங்கி இருப்பது திமுக ஆதரவு நிலைப்பாடு என்று வெளிப்படையாக தோன்றினாலும்.. உள்ளுக்குள் திமுகவின் வாக்கு வங்கியை குறி வைப்பதே அவரின் நோக்கம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.  இந்தநிலையில்  அவர் சேலத்தை தேர்வு செய்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏன்னென்றால் எம்பிக்கள் உதயநிதி வாழ்க என்று கோஷமிடும் அளவிற்கு உதயநிதி கட்சியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கட்சி அவரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இன்னும் ஆட்சி முழுமையாக உதயநிதி கட்டுப்பாட்டில் வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்யின் அரசியலுக்கு பதிலடியாக உதயநிதியை ஆட்சி அதிகாரத்திலும் முன்நிலைபடுத்த ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக அறிவால வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதான் முதற்க்கட்டமாக முதல்வர் ஸ்டலின் வெளிநாடு செல்வதற்க்கு முன்பால அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதேபோல் அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் வரப்போவதாக செய்திகள் வருகின்றன. 

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருவதால் அடுத்த முதல்வர் உதயநிதி என திமுகவினர் கூறி வருகின்றனர். இந்தநிலையில் உதயநிதிக்கு எதிராக தான் விஜய் சேலத்தில் மாநாடு நடத்த தேர்தெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாகத் நடைபெற்ற சேலம் இளைஞரணி மாநாட்டை  உதயநிதி பிரமாண்டமாக நடத்தியதற்கு போட்டியாக விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லபடுகிறது. உதயநிதிக்கும் எனக்கும் தான் நேரடி போட்டி என்று இந்த மாநட்டின் மூலம் அரசியல் களத்தில் உதயநிதியிடம் நேருக்கு நேர் மோத விஜய் அடிப்போடுவதாக தவெக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram