Vijay Aadhav Arjuna: 2026-க்கு பக்கா ஸ்கெட்ச்.. விஜயுடன் ஆதவ் அர்ஜூனா! ப்ளான் என்ன?

ஆதவ் அர்ஜூனாவின் voice of commons  நிறுவனத்துடன் விஜயின் தவெக ஒப்பந்தம் போட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. 


விஜயின் தவெக கட்சி தொடங்கி ஓர் ஆண்டு முடியவுள்ள நிலையில் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்களைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் எடுத்து வருகிறார். நிர்வாகிகளை நியமிப்பது, மாவட்ட செயலாளர்கள் நியமனம் என்று கட்சியின் அடுத்த பாய்ச்சலை தீவிரமாக செய்துவருகிறார். 

ஆரம்பத்தில் இருந்தே தவெகவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் ஜான் ஆரோக்யசாமி தான் செய்து வந்ததாகவும், ஆனால் அவரது செயல்பாடுகளில் விஜய் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது. ”தவெக 2026 தேர்தலில் 2 சதவீத வாக்குகளை கூட தாண்டாது என்று அண்மையில் ஜான் ஆரோக்யசாமி பேசியதாக வெளியான ஆடியோ சோசியல் மீடியாவில்  வெளியாகி சர்ச்சையான நிலையில் அவரை ஓரங்கட்டி தற்போது விஜய் வேறு ஒரு ப்ளானை செயல்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளாதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் தான் ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் திமுக மற்றும் விசிகவுடன் இணைந்து பயணித்த வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் இந்த  முறை தவெகவிற்வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola