”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்
விடாமுயற்சி திரைப்படம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகாது என்ற அறிவிப்பால் ரசிகர்கள் சோகத்தில் உள்ள நேரத்தில், அவர்களை குஷிப்படுத்தும் விதமாக மகிழ் திருமேனி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் டப்பிங், ரீ ரெக்கார்டிங் உள்ளிட்ட வேலைகளில் தாமதம் ஆவதால் பொங்கலுக்கு வெளியாகது என்று படக்குழு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில் தான் அஜித்துக்கு விடாமுயற்சி திரைப்படம் மிகவும் பிடித்தி இருப்பதாகவும், இது போன்ற படங்களில் நடிப்பதையே அவர் விரும்புவதாக சொன்னதாகவும் மகிழ் திருமேனி கூறியிருக்கிறார். அதில், இந்த படம் வழக்கமான mass action entertainer படமா இருக்காது. Fans எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாம theatre கு வந்து இந்த படத்த பாருங்க. உங்கள் மாதிரி என்ன மாதிரி ஒரு சாதாரனமான மனுசனோட வாழ்க்கை தான் விடாமுயற்சி. ஒரு பிரச்சனையில சிக்கிகிற சாதாரண மனுசன் அவரால் முடிஞ்ச அளவுக்கு போராடுறாரு. இத தான் மூவியா பண்ணனும்னு அஜித் ஆசபட்டாரு. அவருக்காக நானும் அதைதான் படமாக்கியிருக்கேன்.
என்னைப் போன்ற ஒரு ஆக்ஷன் பட இயக்குநரை கூப்டு இதை படமாக்கனும், என அஜித் ஏன் சொன்னாருனு நான் ஆச்சரியப்பட்டது உண்டு. அவரே கூட ஒருமுறை எங்கிட்ட, ‘மகிழ் உங்கள் கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியேறி ரிஸ்க் எடுக்க வேண்டிய நேரமிது’ என்றார்.
அதை நான் சிறப்பாக செஞ்சிருக்கேனு நம்புகிறேன். ஏன்னா கடந்த வாரம் டப்பிங் அப்போ படத்தை பார்த்த அஜித் எங்கிட்ட வந்து, ‘இது மாதிரியான படங்கள்ல தான் நடிக்க விரும்புறேன்னு சொன்னாரு. அவரிடம் பாராட்டு பெறுவதைத் தாண்டி எனக்கு வேறென்ன சிறந்த வெகுமதி இருக்க போது” என்று கூறியிருக்கிறார் மகிழ். இதனால் இனி வரும் படங்களில் இளைமையான லுக்கில் அஜித்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.