விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

Continues below advertisement

இயக்குநர் வெற்றிமாறன், ”தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என்ற வசனத்தை விடுதலை 2 ட்ரைலரில்  காட்சிப்படுத்தியுள்ளார். இது தவெக தலைவர் விஜய் மற்றும் சீமானுக்கு எதிராக வைக்கப்பட்டதாகவும் இதன் பின்னணியில் திமுக இடம்பெற்று இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இயக்குனர் வெற்றி மாறனின் திரைப்படங்களில் வரும் டயலாக்குகள் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படும். ”காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம் . படி, அதிகாரத்துக்கு வா, அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கு செய்யாத”என்ற அசுரன் திரைப்படத்தில் வந்த இந்த வசனத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்த விட முடியது. அதேபோல், வட சென்னை திரைப்படத்தில் வரும்,”ஜெயிக்கிறமோ தோக்குறமோ.. சண்ட செய்யனும்”என்ற வசனமும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. 

இந்த நிலையில் வெற்றி மாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் சூழலில் ட்ரெய்லரிலே திராவிட அரசியலின் தெளிப்பு அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதன்படி, இதில் இப்படி ஒரு வசனம் வருகிறது,”தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என்ற வசம் தவெக தலைவர் விஜய் மற்றும் சீமானுக்கு எதிராக வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல்,”என்ன மாதிரி படிக்காத ஒருத்தன் தண்டவாளத்துல தல வச்சு படுத்ததால தான் உன்ன மாதிரி ஒருத்தன் படிச்சுட்டு வந்து இங்க உக்காந்திருக்க”என்ற வசனமும் வருகிறது. இது திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி அரசியல் வாழ்வில் நடந்த சம்பவம் போல் தெரிகிறது என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

வெற்றிமாறன் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்பது அனைவரும் அறிந்தததே. அதே நேரம் வெற்றிமாறன் குடும்பம் தீவிரமான திமுக வழி வந்த குடும்பம் தான்.  இவருடைய தாய் வழி தாத்தாவான இரெ. இளம்வழுதி அண்ணாதுரை ஆட்சிக்காலத்தில் அதாவது 1967 முதல் 1970 வரை  திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ், ஆங்கில மொழிகளில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் திமுகவின் சிறந்த பேச்சாளராகவும் இவர் இருந்திருக்கிறார். அதேபோல் இயக்குனர் வெற்றி மாறனின் தாய்மாமாவான இ.புகழேந்தியும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1989, 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டு   கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி திமுக குடும்ப பின்னணியை கொண்டதோடு விடுதலை 2 திரைப்படத்தை வெளியிடும் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனமும் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதிக்கு சொந்தமானது என்பதாலும் விடுதலை 2 திரைப்படத்தில் அதிகம் திராவிட அரசியளின் தெளிப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram