VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமா
பெண்கள் உட்கார்ந்து இருக்குற இடத்துல, கும்பலா இப்படி போய் ஏறாதீங்க, மாநாட்டை சீர் குழைக்காதீங்க என்று விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில், மது அருந்தி விட்டு இளைஞர்கள் சிலர் செய்த அட்ராசிட்டியால் மேடையிலிருந்த திருமாவளவன் பதறி போனார்..
(thiruma dialogue breathe)
மேலும் பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினரும், எல்லை மீறிய இளைஞர்களை கட்டுபடுத்த முடியாமல் திணறி போனார்கள்..
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நடைப்பெற்றது.. மாலை வரை சற்று அமைதியாக இருந்த தொண்டர்கள், சூரியன் அஸ்தமனம் ஆக தொடங்கியதும், தங்களுடைய வேலையை காட்ட தொடங்கினர்.
மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கார், பெரியார், ஆகியோரின் உயரமான கட் அவுட்கள் மீது ஏறிய இளைஞர்கள் சிலர் அங்கிருந்து செல்பி எடுப்பது, விசிகவின் கொடியை அசைத்து ஆரவாரம் செய்வது என அலப்பறையை கூட்டினர்..
(thiruma dialogue breathe) தம்பி கட் அவுட் மேல ஏறாதீங்க, தவறி விழுந்தா பல பேருக்கு ஆபத்து, தயவு செய்து கீழ இறங்குங்க.
மேலும் சில இளைஞர்கள் மது ஒழிப்பு மாநாட்டில் விசிக தலைவர்கள், மது ஒழிப்பு குறித்து தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் போதே, அதை ரசித்து கொண்டே மாநாட்டிற்கு அருகாமையில் இருந்த பகுதிகளில் அமர்ந்து பாட்டிலை ஓப்பன் செய்து, மதுவை அருந்தியதாக சொல்லபடுகிறது..
இன்னோரு பக்கம் எவ்வளவு நேரம் தான் பின்வரிசையில் நின்றே பார்ப்பது, வாங்கடா முன்னாடி போலாம் என்று காவல்துறையின் தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னே வர முயன்றதால் அங்கே பதற்றமான சூழல் உண்டானது.
குறிப்பாக இளைஞர்கள் கூட்டத்துக்குள் சிக்கி கொண்ட பெண் போலீசின் நிலை பரிதாபமாக இருந்தது. பாதுகாப்புக்காக சென்ற போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை அங்கே நிலவியது. ஆயிரகணக்கான போலீஸ் மற்றும் பவுன்சர்கள் இருந்தும், அடங்க மறுத்த விசிக தொண்டர்களை அடக்க முடியவில்லை.
பெண் போலீஸ் ஒருவர் விலகி ஓடும் வகையிலும், காவலர் ஒருவர் கீழே விழுந்து கிடக்கும் வகையிலும் விசிக தொண்டர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் காண்போரை முகம் சுழிக்க வைக்கும் விதமாக இருந்தது..
Visuals Breathe...
ஒரு பக்கம் பெண் போலீஸ் அல்லோகலப்பட்ட நிலையில், விசிகவின் மகளிர் தொண்டர்களும் செய்வதறியாது திணரினர். மாநாட்டில் பெண்களுக்கு என தனி பகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கேயும் தடுப்புகளை தாண்டி உள்ளே புகுந்த விசிக தொண்டர்கள், அவர்கள் மீது முட்டி மோதிக்கொண்டு நின்றதால் மாநாடு கூட்டம் களேபரமானது..
இதனை கண்டு மேடையிலிருந்து சட்டென எழுந்த திருமாவளவன் “பெண்கள் உட்கார்ந்து இருக்குற இடத்துல, கும்பலா இப்படி போய் ஏறாதீங்க, மாநாட்டை சீர் குழைக்காதீங்க” என்று ஆவேசமாக எச்சரிக்கும் தொணியில் விசிக தொண்டர்களை பார்த்து கர்ஜித்தார்..
ஆனால் அதை துளியும் சட்டை செய்யாத விசிக தொண்டர்கள், தொடர்ந்து எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டதால் சொன்னா கேக்க மாட்டிங்களா என்று நொந்துபோனார் திருமாவளவன்.
(thiruma dialogue breathe)
மேலும் செய்தியாளர்களுக்கு என ஒதுக்கபட்ட பகுதிகளிலும், உள்ளே புகுந்த விசிக தொண்டர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டதால், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களும் திக்குமுக்காடி போயினர்.
இந்த நிலையில் விசிக நடத்திய மாநாட்டில் பேசப்பட்ட கருத்துக்கள் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், விசிக தொண்டர்கள் மாநாட்டில் நடந்துகொண்ட விதம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.