இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்
’ஆட்சி அதிகாரத்தில் பங்கு’, ’அம்பேத்கருக்கு புத்தக வெளியீட்டு விழா’ என அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி திருமாவின் செல்ல பிள்ளையாக மாறிவிட்டார் ஆதவ் அர்ஜூனா.
இந்நிலையில் வரும் காலத்தில் ஆதவ் அர்ஜுனா விசிகவை முழுமையாக கைப்பற்றிவிடுவார் என்ற அச்சத்தில் விசிக சீனியர்ஸ் அவருக்கு எதிராக சதி திட்டம் தீட்ட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தில் தலைவர் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இணைந்ததில் இருந்தே அக்கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டு வருகிறது,. கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே ஆதவ் அர்ஜூனாவிற்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தார் திருமாவளவன்.
இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்று ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார். அதையொட்டி அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினையும் மறைமுகமாக சீண்டினார். இந்த நிலையில் Fengal புயல் மீட்பு நடவடிக்கைகளில் திமுக அரசு முழுமையாக செயல்படவே இல்லை என்று பரபரப்பு புகாரை பதிவு செய்திருந்தார். இதன் மூலம் திமுக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இப்படி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மீது கோவத்தில் உள்ள சூழலில், விசிகவின் துணைப்பொதுச் செயலாளர் வன்னிய அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
அந்த அறிக்கையில், எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம் என்று ஆதவ் அர்ஜூனை நேரடியாக தாக்கியிருக்கிறார். அண்மைக்காலமாக விசிகவின் சீனியர் தலைவர்கள் பலரும் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிரான கருத்துகளை கூறி வருகின்றனர். ஒன்று ஆதவ் அர்ஜூனாவை விசிகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் இல்லை விசிக இரண்டாக உடைக்க வேண்டும் என்ற விசிக சீனியர் தலைவர்கள் திட்டம் தீட்டுவதாக கூறப்படுகிறது,