”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்
விஜய்க்கு செக் வைக்கும் வகையில் முக்கிய அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்து வருண்குமாரை சென்னைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்கின்றனர்.
திருச்சி எஸ்.பியாக வருண்குமார் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பமாக மாறினார். எஸ்.பியாக இருந்து பல்வேறு சம்பவம் செய்த அவரை, அதே திருச்சி சரகத்திற்கு டி.ஐ.ஜியாக அமர்த்தியது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், அவரை சென்னை மாநகர காவல்துறைக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவருக்கான புதிய அசைன்மென்ட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஐ.ஜி., டி.ஐ.ஜி, எஸ்.பி. அந்தஸ்தில் இருந்த 33 அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த பணியிடமாற்ற பட்டியலில் திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் பெயரும் வரவிருந்ததாகவும், அவரை சரியான இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்ற ஆலோசனை நடந்து வந்ததால் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லையென்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், வருண்குமாரை சென்னை மாநகர காவல்துறைக்கு கொண்டு வர ஆணையர் அருண் விரும்புவதாக சொல்கின்றனர். சென்னை மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் பொறுப்பு வருண்குமாருக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை காவல்துறையின் முக்கிய பிரிவாக செயல்படும் நுண்ணறிவு பிரிவு எனும் உளவுத்துறையின் முக்கிய பணியிடமாக இணை ஆணையர் பதவி இருக்கிறது. அந்த பொறுப்பில் இருந்த தர்மராஜன் ஐபிஎஸ், வேலூர் சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அந்த இடத்திற்கு வேறு யாரும் இதுவரை பணியமர்த்தப்படவில்லை.
அந்த பொறுப்புக்கு தர்மராஜன் மாதிரி சிறப்பாக செயல்படக் கூடிய இன்னொரு அதிகாரியை நியமிக்க காவல் ஆணையர் அருண் ஆலோசித்து வந்த நிலையில், அதனை வருண்குமாரிடம் ஒப்படைக்க டிக் அடித்துள்ளதாக பேச்சு இருக்கிறது.
ஒருவேளை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக வருண்குமார் நியமிக்கப்படாமல்போனால், அவர் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்கின்றனர். இந்த பணியிடமாற்றத்தின் பின்னணியில் விஜய்க்கு செக் வைக்கும் வகையில் திமுகவின் ஸ்கெட்ச் ஒன்றும் இருப்பதாக தெரிகிறது.
லாக்கப் மரணங்களுக்கு எதிராக சென்னையில் தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையால் இறந்ததாக கூறப்படும் 24 பேரின் குடும்பங்களை மேடையில் ஏற்றி அதிரவைத்தார் விஜய். இது திமுகவுக்கு எதிராக அமைந்த நிலையில், இனி தவெகவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து, அவர்களின் திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போடும் விதமாக காவல்துறை மூலம் சில வியூகங்களை திமுக அரசு மேற்கொள்ளப்பவதாக சொல்கின்றனர். அதனை கனக்கச்சிதமாக வருண்குமார் செய்வார் என்பதால் சென்னையில் அவருக்கு முக்கிய போஸ்டிங் போடப்படவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.