”கண்ண திறந்து பாருங்க அ.மலை எங்க கார் அவனை இடிக்கல” வன்னியரசு காட்டமான பதிலடி | Vanni Arasu on Annamalai

வன்னியரசு திருமாவளவனின் கார் அந்த டூவீலரை இடிக்கவே இல்லை என்று ஆதாரமாக வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அரைவேக்காடு அண்ணாமலை அவர்களே  இந்த வீடியோவை பாருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை பாரிமுனை பகுதியில் திருமாவளவனின் கார் சென்று கொண்டிருந்த போது  வழக்கறிஞர் ஒருவரின் பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால் விசிகவினர் ஒன்று கூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில், விசிக குண்டர்கள் ஒரு வழக்கறிஞரை தாக்கியதாகக் கூறப்படுகிறது, அவர் ஒரு கார் ஓட்டுநரை மோதியதாகக் கேள்வி கேட்டதற்கு. குறிப்பாக, காரில் விசிக தலைவர் திருமாவளவன் இருந்துள்ளார்.முரண்பாடாக, திருமாவளவன்  இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு போராட்டத்தில் இருந்து திரும்பி வந்தார், ஆனால் அவரது சொந்தப் பரிவாரங்கள் சிறிது நேரத்திலேயே ஒரு வழக்கறிஞரைத் தாக்கினர் என்று கூறியுள்ளார்.

அரைவேக்காடு அண்ணாமலை அவர்களே  இந்த வீடியோவை பாருங்கள் என்று வன்னியரசு தனது எக்ஸ் பதிவில் ஆதாரமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு...தலைவர் வாகனம் வருகிறது. நீங்கள் சொல்லும் சமூகவிரோதியின் இரு சக்கர வண்டி இடிக்கப்படவில்லை. ஆனால் அவனாகவே வந்து வீம்பு இழுக்கிறான். இவன் சமூகவிரோதி அல்லமால் வேறு யாராக இருக்க முடியும்? இந்த சமூகவிரோதிக்கு ஆதரவு தரும் அண்ணாமலை யாராக இருக்க முடியும்? என்று அண்ணாமலைக்கு வன்னியரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola