Vaiko Crying : ’’புலிக்குட்டிகளை இழந்துட்டேன்’’விபத்தில் இறந்த மதிமுகவினர்.. வைகோ கண்ணீர்மல்க பேட்டி
மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மதிமுக நிர்வாகிகள் மூவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் வைகோ.
கடந்த 5ம் தேதி சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மதிமுக நிர்வாகிகள் மூவர் விபத்தில் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து மற்றும் அமல்ராஜ், புலிசேகர் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கீரைத்துரை வாழைத்தோப்பு பகுதியில் உள்ள 3 மதிமுக நிர்வாகிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வைகோவை பார்த்து உயிரிழந்தோரின் உறவினர்கள் கதறி அழுத நிலையில். அவர்களுக்கு ஆறுதல் கூறினார் வைகோ. மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஒன்றிணைந்து உரிய உதவிகளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.