ABP News

Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

Continues below advertisement

புதிய கல்விக்கொள்கை மூலம், இந்திய திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது, திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் நான் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள் பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா பரபரப்பு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை, மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை போன்ற அடுத்தடுத்த திட்டங்களால், மாநில அரசுகளிடம் உள்ள ஒரு சில அதிகாரத்தையும் மொத்தமாக பறிக்கும் விதமாக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்தநிலையில் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை விடுவிக்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. 

இந்நிலையில் பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில் எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன்.என்னுடைய RACEING துறையில் சிறந்து விளங்கிய  இஸ்லாமிய பெண் என்பதால்.நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்தேன்.நான் பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக திமுக ஊடகங்கள் என்னை போட்டி போட்டுக் கொண்டு நேர்காணல் எடுத்தனர்.அதன் சூழ்ச்சியும் திமுகவின் அரசியலும் எனக்கு அப்போது தெரியவில்லை.என்னை பாஜகவில் இருந்து வெளியேற்ற திமுக சார்பில் இருந்து என்னுடைய தொழில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.ஒரு படி மேல் சென்று நீங்கள் திமுகவில் இணையுங்கள் உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கிறோம் என்றும் கூறினார்கள்.

எனக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் நான் ஒரு இஸ்லாமிய பெண்.இஸ்லாமியர்களுடைய வாக்கு ஒன்று கூட பாஜக பக்கம் போக கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்கள். நான் மறுபடியும் சொல்கிறேன் நான் தமிழ் பாரம்பரிய குடும்பம் கிடையாது தமிழகத்தில் பிறந்து உருது மொழியை பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு ஒரு சவால் இன்று என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும்.திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola