Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!

Continues below advertisement

உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் சிலர் தமிழ் தாய் வாழ்த்து பாடலின் சில வார்த்தைகளை தவறாக பாடியதால், இரண்டாவது முறையாக மீண்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடல் அரசு நிகழ்ச்சியில் பாடப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழ்தாய் வாழ்த்து பாடல் மீண்டும் பாடபட்டதாக விளக்கமளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்..


தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் என்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புத்தாய்வு வல்லுணர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், தமிழ்தாய் வாழ்த்து பாடலை அங்கிருந்த அரசு பெண் ஊழியர்கள் சிலர் பாடினர். அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடலில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகள் தவறாக பாடப்பட்டது. 

இந்த நிலையில், மீண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை சரியாக பாடுமாறு உதயநிதி ஸ்டாலின் சொன்னதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடலை இரண்டாவது முறையாக பாடியதாக சமூக வளைத்தளங்களில் தகவல் வெளியாகின.

ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, முதல் முறை தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடிய போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது, அதன் காரணமாகவே இரண்டாவது முறை தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்னும் வரிகள் விடுப்பட்டு போனது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் சரியாக  பாடப்படாதது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram