Udhayanidhi Stalin plays cricket : ‘’நீ அடிச்சு ஆடு கபிலா!’’கிரிக்கெட் ஆடிய உதயநிதி மாஸ் BATTING

Continues below advertisement

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான  கிரிக்கெட் தொடரை  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார்

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

இ தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளின் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி தொடர் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

 இதில்  தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

அத்துடன் டாஸ் போட்டும் பேட்டிங் செய்தும் அவர் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் போட்டியை கண்டு ரசித்த அவர் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கி சிறப்பித்தார். 

இந்த போட்டியில் தமிழக முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் ஐ ஆர் எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram