Udhayanidhi stalin deputy CM | தலைமை ஏற்க வா.. உதயநிதிக்கு PROMOTION.. உற்சாகத்தில் உடன்பிறப்புகள்
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் உலா வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக இளைஞரணி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு ஆட்டத்தை மொத்தமாக கலைத்து ஸ்டாலின் முதலில் இருந்து ஆடப் போகிறாராம். நேற்று ஒரே நாளில் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் நிர்வாக ரீதியாக சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் 22-ந்தேதி வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சுதந்திரத் தினத்திற்கு பிறகு அமெரிக்கா செல்ல தற்போது திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி பொறியில் சிக்கி உள்ள நிலையில் இதில் சிலர் அமைச்சரவையில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் சேர்க்கப்படவும்.. மாவட்ட செயளார்கள் பெரிய அளவில் சேர்க்கப்படவும் வாய்ப்பிருப்பதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 5 அமைச்சர்கள் மீது ஸ்டாலின் டேபிள்க்கு புகார் சென்றுள்ளதாகவும் அவர்கள் மாற்றப்படலாம் என்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக மவுஸ் கூடிக்கொண்டே வருவதால் உதயநிதியை துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள்.. வர கூடிய நாட்களில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என பொருத்திருந்து பார்க்கலம்