TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!
கோமாளி கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் டெபாசிட் இழக்க வேண்டியது தான் என்றும் தவெக மாவட்ட செயலாளர் குஷி மோகன் அட்டூழியம் செய்வதாகவும் போர்க்கொடி தூக்கி உள்ளனர் தவெக தொண்டர்கள்.
தவெக என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய் 2026-ல் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்று முனைப்புகாட்டி வருகிறார். மக்களும் விஜய் வரும் இடத்தில் எல்லாம் தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் சூழல் தற்போது தவெக மாவட்ட செயலாளர்களே விஜய்க்கு ஆப்படிக்கும் வேலையும் இறங்கி விட்டனர்.
விழுப்புரத்தில் தவெக சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக குஷி மோகன் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் இந்த முதல் கட்சி நிகழ்ச்சியில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்துக் கொள்வார் என கூறப்பட்ட நிலையில் விழுப்புரம் நகர் முழுவதும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட செயலாளர் குஷி மோகன் தலைமையில் விழுப்புரம் புறவழி சாலையில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்ட நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் காந்தி சிலை பகுதியில் தவெக கொள்கை தலைவர்களின் புகைப்படத்திற்கு மறியாதை செலுத்தும் விதமாகவும், பொதுச்செயலாளர் ஆனந்திற்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இச்சூழலில், இதனை அறிந்த விழுப்புரம் மாவட்ட செயலாளர் குஷி மோகன் பொதுச் செயலாளர் ஆனந்தை இரு சக்கர வாகனத்தில் மாற்று பாதையில் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் காந்தி சிலை பகுதி வழியாக பொதுச் செயலாளரின் கார் மட்டும் சென்றதை அறிந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.