Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!

Continues below advertisement

விஜய்யின் அரசியல் நிலைபாடு என்ன? திராவிடத்தைக் கையிலெடுத்து விஜய் அரசியல் செய்கிறாரா ? திமுகவுக்கு எதிர்ப்பும், அதிமுக வாக்குகளுக்கு குறிவைப்பதும் தான் விஜயின் அரசியல் கணக்கா என கேள்வி எழுந்து வருகிறது, இதனால் திராவிட கட்சிகள் பீதியில் உள்ளனர்.

ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இதற்கிடையே, தவெகாவின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை, சித்தாந்தம் ஆகியவற்றை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வாழ்ந்த காலம் கடந்தும் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றை பெயர்தான் பெரியார். சமத்துவம், சமூகநீதி போன்ற மனிதகுலத்தின் மிக அத்தியாவசியமான கொள்கைகளுக்காக, குரல் கொடுத்து முக்கிய சீர்திருத்தங்களுக்கான காரணமாக திகழ்கிறார். தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற பெரியாரின் 146ஆவது பிறந்த நாளான இன்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அண்ணாவின் பிறந்தநாளுக்கும் பெரியாரின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து, பெரியார் திடலுக்கு நேரடியாக சென்று மரியாதை செலுத்தியதன் மூலம் தான் எந்த விதமான அரசியல் பேசப்போகிறார் என்பதை விஜய் தெளிவுப்படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட திமுக, அதிமுகவின் அதே கொள்கையை விஜய் பேச தொடங்கி உள்ளார். திமுகவிற்கு கண்டிப்பாக விஜய் போட்டிதான்.. அதே சமயம்.. திமுக வலுவான தலைமையுடன் இருக்கும் நிலையில், தோல்வி முகத்தில் இருக்கும் அதிமுகவின் வாக்குகளை குறி வைத்து விஜய் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி உள்ளது. இன்னொரு பக்கம் விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகளுக்கு புதிய மாற்று கூட்டணி கிடைக்கும் சூழ்நிலையை விஜய் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்தநிலையில் பாஜகவுடன் சேர நினைக்காதா விசிக, காங்கிரஸ் போன்ற திராவிட கட்சிகளுக்கு கைகொடுக்கும் விதமாக விஜய் உருவெடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி தீவிர மதவாதத்த அரசியல் எல்லாம் செய்யது வெற்றி பெற முடியவே முடியாது என்று நங்கு அரசியல் படித்தவர்கள் அறிவார்கள். பல அரசியல் விமர்சகர்களும் அதயே தெரிவிக்கின்றனர். இதை விஜய் நன்கு புரிந்து கொண்டுள்ளதால் அவர் பாஜக பக்கம் சாய வாய்ப்பு இல்லை என்பதை விஜயின் செயல்கள் உணர்த்துகின்றது. அதுமட்டுமல்லாமல் விஜய் பேசும்போது, நீட் ரத்து செய்யப்படுமா என்பது தெரியாது, அப்படியே அது நடந்தாலும் அதை நடத்தவிட மாட்டார்கள் என பாஜகவை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

இந்தநிலையில் இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது விஜய் திமுகவுக்கு எதிர்ப்பும், அதிமுக வாக்கு குறிவைப்பதும் தான் விஜயின் அரசியல் கணக்கு என தெள்ளதெளிவாக தெரிகிறது. இதனால் திராவிட கட்சிகள் பீதியில் உள்ளனர். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய் இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram