TVK Vijay | புஸ்ஸி ஆனந்திடம் பொறுப்பு.. ஆட்டத்தை தொடங்கிய விஜய்! அப்செட்டில் ஆதவ் அர்ஜூனா

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை விஜய் தீவிரபடுத்தியுள்ளதாக சொல்கின்றனர். தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவு அர்ஜூனாவிடம் இந்த பொறுப்பை விஜய் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் புஸ்ஸி ஆனந்திடம் பொறுப்பை கொடுத்து ஆதவை ஒரங்கட்டியிருக்கிறாராம் விஜய்.

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன. ஆளும் கட்சியான திமுக 200 அல்ல 234 தொகுதிகளையும் வெல்வோம் என்று கூறி வருகிறது. அதேபோல், கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. மறுபுறம் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயும் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து அரியணையில் அமர் வேண்டும் என்று தங்களது கட்சிப்பணிகளை தீவிரபடித்தியுள்ளார். 

இந்த நிலையில், தவெக சார்பில் தமிழ் நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தவெக தலைவர் விஜய் தீவிரப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக ஒவ்வொரு தொகுதியிலும் 3 பேரை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவு அர்ஜூனாவிடம் இந்த பொறுப்பை  கொடுப்பார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், யாரை வேட்பாளராக தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பான முழு பொறுப்பையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விஜய் ஒப்படைத்துள்ளதாகவும் இதனால் ஆதவ் அர்ஜூனா அப்செட்டாகியுள்ளாகவும் சொல்கின்றனர். தன்னுடன் ஆரம்பத்தில் இருந்தே புஸ்ஸி ஆனந்ந்த் இருப்பதால் யார் களத்தில் நமக்காக வேலை செய்தார்கள் என்பது தெரியும் என்பதால் அவரிடம் விஜய் இந்த பொறுப்பை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola