TVK Vijay Plan : BOYCOTT ஆதவ், ஜான்!ஆக்ஷனில் இறங்கிய விஜய் புது ரூட்டில் தவெக? | Karur Stampede
கரூர் துயர சம்பவம் அரங்கேறி 10 நாட்களுக்கு மேலான நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்காத விஜய் முதன்முதலில் வீடியோ கால் மூலம் பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் சரியான பிளானிங் இல்லாமல் தனது பிரச்சாரத்தை சொதப்பிய தவெக முதற்கட்ட நிர்வாகிகளை கழற்றிவிட்டு தானே ஆக்ஷனில் இறங்கியுள்ளார் விஜய் என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக்!
கரூரில் கடந்த செப்டம்பர் 27 நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ததற்காக தவெக மாவட்ட நிர்வாகி மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை இதுவரை நேரில் சந்திக்கவில்லை என்பது தான் தவெக தலைவர் விஜய் மீது பெரிய விமர்சனமாக இருந்து வருகிறது.
இதனையடுத்து தற்போது சென்னையில் இருந்து 20 பேர் கொண்ட த வெ க நிர்வாகிகள் கரூர் மாவட்டத்தில் உயிரிழந்த குடும்பங்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அவருடைய அலைபேசியில் இருந்து வீடியோ கால் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் இந்த மூவ் கரூர் தவெக நிர்வாகிகளுக்கு கூட தெரியாது என்பது தான் ஹைலைட்!
நேற்று இருபதுக்கு மேற்பட்ட வீடுகளில் வீடியோ கால் பேசி இருப்பதாகவும்,தொடர்ந்து இன்றும் மீதம் உள்ள உயிரிழந்த இல்லத்திற்கு சென்று வீடியோ கால் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த வீடியோ கால் சம்பந்தமாக புகைப்படமும் வீடியோவோ எடுக்க வேண்டாம் என விஜய் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விஜய் தற்போது புதிய சில இரண்டாம் கட்ட நிர்வாகிகளை தன்னுடன் வைத்துக்கொண்டு சுயமாக முடிவெடுக்க தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி, அருண்ராஜ் உள்ளிட்ட தவெக முதற்கட்ட தலைவர்கள் மீது விஜய் கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
சரியான ப்ளானிங் இல்லாமல் தனது அரசியல் நகர்வுகளை சொதப்பல்கள் மேல் சொதப்பல்களாக மாற்றிவருவதால் விஜய் தன்னை சுற்றி புதிய சர்கில்லை உருவாக்க முடிவு செய்துவிட்டாராம்.அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்திகளை சரி செய்து கூடிய விரைவில் களத்தில் சந்திக்க ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.