TVK Vijay | அசிங்கப்படுத்திய விஜய்! மகனை பறிகொடுத்த தந்தையை விரட்டியடித்த பவுன்சர்கள்
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் இன்று நேரில் சந்தித்து வரும் நிலையி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஈரோடை சேர்ந்த மோகன் என்பவரின் தந்தை கந்தசாமியை உள்ளே அனுமதித்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை கரூர் சென்று சந்திக்காமல் சென்னை வரவழைத்துள்ளார் தவெக தலைவர் விஜய். அதன்படி, நேற்று கரூரில் இருந்து புறப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்றிரவு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளனர். இன்று காலை 10 மணிக்கு விஜய் நேரில் வந்து உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் மாமல்லபுரம் நட்சத்திர உணவக வளாகத்தில் ஏராளமான பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக கழக நிர்வாகிகள் மாமல்லபுரம் வருகை தருகின்றனர்
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகன் (19) என்பவரின் தந்தை கந்தசாமியை உள்ளே அனுமதிக்கததால் கந்தசாமி மாமல்லபுரம் நட்சத்திர உணவக வளாக வாசலில் நெடுநேரமாக காத்திருந்து வருகின்றார். உயிரிழந்த இளைஞனின் அம்மா மற்றும் சித்தப்பா ஆகியோர் உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்னை உள்ளே விட மறுப்பதாக அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.





















