TVK Vijay Conditions : ’’கரூர் மக்களை சந்திக்கிறேன்ஆனால் சில CONDITIONS..!’’தலைசுற்ற வைத்த விஜய்
கரூர் மக்களை சந்திக்கிறேன் ஆனால் சில கண்டிசன்ஸ் என தவெக தலைவர் விஜய் சாத்தியமற்ற சில கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறையினரை தலைசுற்ற வைத்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இதுவரை விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. சமீபத்தில் வீடியோ காலில் அவர்களுடன் உரையாடிய விஜய் விரைவில் சந்திப்பதாக வாக்கு கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக மீண்டும் கரூர் செல்ல திட்டமிட்டுள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது பயணத்திற்கு பாதுகாப்பு கேட்டு இன்று தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளதாக பிரத்யேக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதில் மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அதில் விஜய் கோரியுள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகள் பிரதமருக்கே இந்தியாவில் வழங்கப்படுவதில்லை என்பதுதான்! அதில் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கோரிக்கைகள் யாதெனில்,
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் நடிகர் விஜய்க்கு திருச்சி விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தனது வாகனத்திற்கு போக தனிவழி வேண்டும்..மேலும் விமான நிலையத்திற்குள் தொண்டர்கள் ரசிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும். கூட்டம் அறவே கூடாது
அடுத்ததாக திருச்சியில் இருந்து கரூர் வரை Green Corridor ஏற்பாடு செய்யவேண்டும்.
எந்த இடத்திலும் நின்று போகாதவாறு, சிக்னல் இல்லாமல் பாயிண்ட் டூ பாயிண்ட் நேரடியாக செல்ல வழி வேண்டும். வாகனத்தை பின்தொடர்ந்து வருபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
கரூரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு தொண்டர்களை நுழைய விடக்கூடாது.
நிகழ்ச்சியில் எந்த ஊடகத்துக்கும்
அனுமதி வழங்ககூடாது. என சில சாத்தியமற்ற கண்டிஷன்களை விஜய் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே செலிபிரிட்டி ஸ்டேடஸை விஜய் இன்னும் விடவில்லை என்கிற விமர்சனங்கள் அவர்மீது எழுந்து வரும் நிலையில், தற்போது இதுபோன்ற கட்டுப்பாடுகளை கேட்டு
சீன அதிபர் போல சீன் போடுகிறார் விஜய் என விமர்சகர்களை பொங்க வைத்துள்ளார் விஜய். இந்நிலையில்
விஜய்யின் கோரிக்கைகளுக்கு காவல்துறை என்ன மாதிரியான பதிலை அளிக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது





















