TVK Vijay Alliance | பாமக - தேமுதிக - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாமக, தேமுதிக உடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் விஜய் தரப்பு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக திமுக கூட்டணிக்கு எதிராக பிரமாண்ட கூட்டணியை அமைக்க விஜய் திட்டமிட்டு வருவதாக சொல்கின்றனர்.

அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணியை இப்போது அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கும் சமயம் கூட்டணிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

முன்னதாக, தங்களது முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி பாஜகவுடனும், அரசியல் எதிரி திமுக உடனும் கூட்டணி இல்லை என்று விஜய் அறிவித்தார். அதோடு, தங்களுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்றும் அறிவித்தார். தமிழக அரசியலை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி அமைந்தாலும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிக்கு அதிகாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் விஜய் இப்படி அறிவித்தது அரசியல் களத்தில் ஒரு புயலையே கிளப்பியது.

இதனிடையே அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்றும் தகவல் வெளியானது. ஆனால், தவெக போட்ட கண்டிஷன்களால் இந்த கூட்டணி அமையாமல் போனது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தாலும் விஜய் குறித்து எந்த ஒரு கருத்துக்களையும் பொதுவெளிகளில் பகிர வேண்டாம் என்று இபிஎஸ் அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு கண்டிஷன் போட்டதாக சொல்லப்பட்டது. இது அதிமுகவிற்கு தவெக உடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்பதை காட்டுவதற்கான முயற்சியே என்று சொல்லப்ப்ட்டது. 

ஒரு வேலை அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றாலும் ஓகே இல்லையென்றாலும் விஜய் தனது தலைமையில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைக்க திட்டம் தீட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், பாமக மற்றும் தேமுதிகவுடன் விஜய் தரப்பு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு இன்னும் சில கட்சிகளுடன் தவெக பேசிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  டிசம்பர் மாதம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற சொல்கின்றன பனையூர் வட்டாரங்கள்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola