TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?
தவெக பெண் நிர்வாகி ஒருவர் கஞ்சா விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மோ.பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா என்கிற பிரியா. இவரது கணவர் சந்திரன், பிரியாவின் தம்பி ஆகிய மூன்று பேரும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் விஜயின் தவெக நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கஞ்சா விற்பனை தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் பிரேமாவிடம் சென்று இதுபோன்று பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழிக்க கூடாது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வெளியூரிலிருந்து அடியாட்களை வர வைத்து இந்த பிரச்சனையில் தலையீடு செய்பவர்களை அடியாட்க்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் முத்து என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்ற பெயரில் பிரேமா என்கிற பிரியா, அவரது கணவர் சந்திரன், தம்பி சேட்டு ஆகியோர் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், விபச்சாரம் உள்ளிட்ட தொழிலில் ஈடுபடுவதால் பெரிய ஆட்களின் துணையோடு ஊர் பொதுமக்களை மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்ட தலைவர் பிரபாகரனிடம் இது பற்றி கேட்டபோது, "கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்க கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் இவர்கள் வகித்து வந்த பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், இவர்களுக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.” என்றும் கூறியுள்ளார்