TVK Maanadu Vijay Speech | பெயர் சொல்ல பயந்தாரா விஜய்? ஒளிஞ்சு விளையாடியது ஏன்?
தனது 2 எதிரிகள் திமுகவும், பாஜகவும் தான் என கட்சியின் பெயரையோ, கட்சித் தலைவர்களின் பெயரையோ கூட சொல்லாமல் விமர்சித்துள்ளார் தவெக தலைவர் விஜய். சில சிக்கல்களை மனதில் வைத்துதான் விஜய்யின் இந்த மூவ் இருந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார் விஜய். விஜய்யின் அரசியல் என்ன என்று எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் கொள்கை பற்றியும், கூட்டணி பற்றியும் பல முக்கிய விஷயங்களை தனது ஆவேசமான பேச்சில் அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார் விஜய். ஆனால் தனது அரசியல் எதிரிகள் யார் என்று சொல்லும் போது மட்டும் மறைமுகமான அட்டாக் மோடை கையில் எடுத்துள்ளார் விஜய். நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத அரசியல், நம்முடைய மற்றொரு எதிரி கரப்ஷன் கபடதாரிகள் என பாஜக மற்றும் திமுகவுக்கு எதிர்ப்பது தான் எனது அரசியல் என சொல்லியுள்ளார்,.
ஆனால் இதில் திமுக, பாஜக பெயரையோ அல்லது கட்சித் தலைவர்கள் பெயரையோ விஜய் குறிப்பிடவில்லை. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது முதல் பேச்சு இதுதான். அவரது ரசிகர்கள் இன்னமும் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். ரசிகர்களை எல்லாம் தவெக தொண்டர்களாக கட்சிப் பக்கம் கொண்டு வர வேண்டிய சவால் விஜய்க்கு இருக்கிறது. அதனால் ஆரம்பத்திலேயே கட்சித் தலைவர்களை நேரடியாக விமர்சித்து விட்டால் மற்ற கட்சியில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு அதிருப்தி வந்து விடுமோ என விஜய் தயங்கியிருக்கிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.
தனது பேச்சை முடிக்கும் போது கட்சி பெயரையோ, தலைவர்கள் பெயரையோ சொல்லாதது ஏன் என்றும் விஜய் விளக்கம் கொடுத்துள்ளார்.