TVK Maanadu : 234 தொகுதிக்கும் ரெடி! மாஸ் காட்டும் விஜய்! TVK பக்கா ப்ளான்

தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு, வரும் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்  நடைபெற உள்ள நிலையில், தவெக மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை நியமனம் செய்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரசியல் களத்தில் தவெகவின் முதல் மாநாடு பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. மாநாடு தொடர்பாக நாளுக்கு நாள் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று மற்றொரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக தவெக வெளியிட்ட அறிக்கையில், "கழகத் தலைவர் அறிவித்தபடி. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா. வருகிற 27.10.2024 அன்று. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், தலைவர் விஜய்யின் ஆணைப்படி. சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முழு மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பொருளாதாரக் குழு தலைவராக கட்சியின் பொருளாளர் வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola