TVK Maanadu Issue உடைந்து கிடக்கும் நாற்காலிகள்குப்பைக் கூளமான மாநாடு திடல் விளாசும் உள்ளூர் மக்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வி.சாலையில் நடைபெற்றதில் 15 ஆயிரம் இருக்கைகள் உடைக்கப்பட்டு, தண்ணீர் பாட்டில்கள் போடப்பட்டு குப்பை காடாக புயல் அடித்து ஓய்ந்தது போலா மாநாட்டு திடல் காட்சி அளிப்பதால் அதனை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வி.சாலையில் நடைபெற்றதில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்திருந்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாடு பகுதியில் திரண்டதால் மாநாடு திடலில் அமைக்கப்பட்ட 50 ஆயிரம் இருக்கைகளில் 15 ஆயிரம் இருக்கைகள் உடைக்கபட்டுள்ளன.
மாநாட்டிற்கு வந்தவர்கள் அதிகமானோர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தியதால் மாநாடு திடல் முழுவதும் தண்ணீர் பாட்டில் குப்பைகள், காலணிகள் என புயல் அடித்து ஓய்ந்தது போலா மாநாட்டு திடல் பகுதி காட்சியளிக்கிறது. தண்ணீர் பாட்டில்களை எடுக்கும் பணியில் குப்பைகளை எடுக்கும் நபர்கள் தண்ணீர் பாட்டில் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். மாநாடு பந்தல் அமைத்தவர்கள் உடைந்த இருக்கைகளை அப்புறப்படுத்தி நல்ல நிலையில் உள்ள இருக்கைகளை எடுத்து செல்லும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநாடு திடல் முழுவதுமாக கூட்ட நெரிசலில் சிக்கி காலனிகளை விட்டு சென்றதால் அதிகமான காலணிகள் கிடைக்கின்றன.
மாநாட்டு திடலில் போடப்பட்ட மின் விளக்குகள் மேடையை அகற்றும் பணி தொடங்கியுள்ளதால் அருகிலுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் மாநாட்டு திடலை பார்வையிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர். மாநாட்டிற்காக அதிகமானோர் வருகை புரிந்தால் நேற்றைய தினம் போக்குவரத்து நெரிசல் காலை 11 மணிக்கு ஏற்பட்ட நிலையில் அதிகாலை 2 மணிக்கு சீரானதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.