TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!

மாதம் ஒரு நிகழ்ச்சி நடத்தி காணாமல் போய்விடுகிறது தவெக..ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லோரும் மக்களை சந்திக்காமலேயே 2026-ல் CM கனவில் விஜய் இருப்பதாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வருது என்று இந்த மாதத்திலேயே தொகுதி வாரியாக விஜய் மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார் விஜய்.  அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் அக்கட்சியின் பிரமாண்ட  மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி காட்டினார். பின்னர் மாவட்ட செயலாளர்களை நியமித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவெக பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.

முன்னதாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை திறந்த வேனில் சென்று சந்தித்து பேசினார் விஜய். ஆனாலும் அவர் பொதுமக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்றும் ஒரு வருடத்தில் ஒரே ஒரு முறை தான் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். பனையூர் அலுவலகத்திலேயே அரசியல் செய்து கொண்டிருக்கும் விஜய் பொதுமக்களை நேரடியாக சந்திக்க ஏன் மறுக்கிறார் என்றும் களத்திற்கு வந்து அரசியல் செய்யுங்கள் விஜய் என்று ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிகள் வரை விஜயை கேள்விகளை வறுத்தெடுக்கின்றனர். கடைசி திரைப்படத்தில் நடிப்பதால் தான் பொதுமக்களை விஜய் இன்னும் சந்திக்கவில்லை என்று தவெகவினார் சொன்னாலும் அது அரசியலுக்கு சரிப்பட்டு வராது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்த மாதத்தில் ஒரு நல்ல நாளாய் பார்த்து மக்களை சந்திக்க உள்ளாராம் விஜய். தொகுதி வாரியாக மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கண்டறிந்து அதையே அரசியல் பிரச்சாரமாக மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  அதற்கான ஏற்பாடுகளை செய்ய தவெகவினர் தீவிரம் காட்டி வருவதாகவும் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola