Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்

Continues below advertisement

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பலரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார். மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram