TVK Karur Stampede Case | பனையூர் வந்த CBI அதிகாரிகள்பரபரக்கும் தவெக அலுவலகம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிபிஐ அதிகாரிகள் அப்பகுதியில் வணிகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது இதில் இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஜவுளிக்கடை உரிமையாளர், செல்போன் கடை உரிமையாளர்,மெக்கானிக் ஷாப் உரிமையாளர் என 15 பேர் தற்பொழுது சம்மனுக்கு சுற்றுலா மாளிகையில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
இரண்டு நாட்களாக வேலுச்சாமி புரத்தில் சிபிஐ அதிகாரிகள் 3D ஃபாரே ஃபோகஸ் லேசர் ஸ்கேனர் கருவியுடன் அப்பகுதியில் அளவிடும் பணியானது சுமார் 700 மீட்டர் தூரம் நடைபெற்றது
இன்று சிபிஜ அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நபர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் இரண்டாம் கட்டம் விசாரணையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வந்தார்.அவருடன் கானத்தூர் போலீசாரம் உடன் இருந்தனர்
தவெக அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிந்த பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.





















