ABP News

TVK Issue : ’’பணம்..ஜாதிக்கு தான் பதவிபுஸ்ஸி ஆனந்த் நல்லவன் இல்ல’’தவெக நிர்வாகி பகீர் வீடியோ

Continues below advertisement

தமிழக வெற்றிக் கழகத்தில் ஜாதி மற்றும் பணம் அடிப்படையில் தான் பதவி வழங்கப்படுகிறது புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு உண்மையாக இல்லை என தவெக நிர்வாகி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பணம் கொடுத்தால் தான் பதவி என நிர்வாகிகள் சிலர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையிலும் தவெக நிர்வாகி ஒருவர் புஸ்ஸி ஆனந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விஜய்யின் தவெக கட்சியில் பலருக்கு புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓவியராக பணியாற்றி வருகிறார் இவர் கடந்த 12  ஆண்டுகளாக நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் ஆரணி இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்துள்ளார்.தற்பொழுது விஜய்யின் தவெக கட்சியில் மாவட்ட வாரியாக பதவிகள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன இதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக செய்யாறு சேர்ந்த சத்யா என்பவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது

இதற்கு ஆரணி பகுதியில் நேரடியாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் கடும் எதிர்ப்புகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த ஹரிஷ் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தவெக கட்சியில் பதவி வழங்க ஜாதி பார்க்கப்படுகின்றது அதுமட்டுமில்லாமல் பதவிகளுக்கு பணம் எதிர்பார்க்கின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

இதற்கு முழு காரணம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் தான் என்று பகிரங்க குற்றச்சாட்டு வைக்கின்றார்

இந்த விஷயம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய்க்கு தெரியவில்லை என்றும் புஸ்ஷி ஆனந்தின் காலில் விழுந்தால் மட்டும் நான் பதவி இல்லையென்றால் அவர்களுக்கு பதவி இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் தவெக கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram