TVK Bussy Anand | பனையூர் வந்த விஜய் புஸ்ஸி காலில் விழுந்த நிர்வாகிகள் சர்ச்சையை கிளப்பிய வீடியோ

Continues below advertisement

தவெக நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கால்களை தொட்டு வணங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.


சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுகலகத்திற்கு 20 நாட்கள் கழித்து தவெக தலைவர் விஜய்  நேற்று மாலை வருகை புரிந்தார். 

கரூர் துயர சம்பவத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செய்லாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று இருவரும் குடும்பத்துடன் பனையூர் அலுவலகம் வந்து தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசினர்.  30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. 

இச்சூழலில் தான்  இ ந்த சந்திப்பிற்கு முன்னதாக பனையூர் அலுவலகத்தில் இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கால்களில் தவெக நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விழுந்த தொட்டு வணங்கினர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அண்மையில் எனது காலில் யாரும் விழக்கூடாது அப்படி மீறி யாரவது விழுந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola