TVK Bussy Anand | தளபதியின் தீய சக்தி! ஆனந்த்-ஐ நீக்குங்க விஜய் தவெகவினர் போர்க்கொடி
கரூர் சம்பவத்தை தொடர்ந்து தவெகவினர் பலரும் புஸ்ஸி ஆனந்தின் பொதுச்செயலாளர் பதவியை பறிக்க வேண்டும்..ஏன் அவரை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என கொந்தளிக்க தொடங்கியுள்ளது தவெகவில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று விஜய்யும் பிற தவெக முக்கிய நிர்வாகிகளும் அங்கிருந்து அப்ஸ்காண்டானது பொதுமக்கள் மத்தியிலும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, விஜய்யின் தலைமை மீதும் அவரை சுற்றியுள்ள முதற்கட்ட நிர்வாகிகளின் செயல்திறன் மீது மிகப்பெரிய கேள்வியை இந்த நிகழ்வு எழுப்பியது. இதனையடுத்து இந்த ஆட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் தான் பலரது கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். ஏற்கனவே தவெக பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பணம் வாங்கிக் கொண்டு பதவி தருவது, அவரது ஆதரவாளர்களை முக்கிய பொறுப்பில் அமர வைப்பது, போஸ்டரில் விஜய் படத்துடன் தனது புகைப்படம் என பல வேலைகள் அவர் பார்த்து வந்ததாகவும், தவெகவின் முகமாக தன்னை காட்டிக்கொள்ள அவர் பெரிதும் விரும்புவதாகவும் அவர்மீது பல புகார்கள் கட்சிக்குள்ளேயே எழுந்தன.
இந்நிலையில் தற்போது கரூர் சம்பவத்தை அடுத்து தவெகவின் முதற்கட்ட நிர்வாகிகளும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானது கட்சிக்கு பெரும் அவப்பெயரை விளைத்ததாக தவெகவினர் குமுறுகின்றனர். மேலும் இது போன்ற இக்கட்டான சூழலில், கட்சி தொண்டர்களையும் அடிமட்ட நிர்வாகிகளையும் தவிக்கவிட்டு விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தவெகவினர் புலம்புவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், புஸ்ஸி ஆனந்த் வெளியேகாரில் மறைவாக சென்று விஜயை அவரது வீட்டில் சந்தித்து வந்தார். இதனையடுத்து தற்போது சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுகலகத்திற்கு 20 நாட்கள் கழித்து தவெக தலைவர் விஜய் நேற்று மாலை வருகை புரிந்தார். அப்போது கரூர் வழக்கில் கைதான தவெக மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டு வெளியே வ்ந்த நிலையில், அவர்கள் இருவரும் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழுந்து வணங்கியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து புஸ்ஸி ஆனந்தை கட்சியை விட்டே நீக்க வேண்டும் திறனற்ற பொதுச்செயலாளர் ஆனந்த், தளபதியாரின் தீய சக்தி என்றெல்லாம் தவெகவினர் குமுறி வருகின்றனர்