TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க? அதிகாரிகளை மிரட்டிய தவெகவினர்

Continues below advertisement

செங்கல்பட்டில் தவெகவினரால் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த பேருந்து நிழற்குடையை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகளுடன் தவெகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட மெல்ரோசாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அமைந்துள்ளது. அதற்கு எதிரில் தவெகவினர் சார்பில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதாக கூறி நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிழற்குடையை அகற்றினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த தவெகவினர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

முன்னதாக பயணிகள் நலன் கருதி கல்லூரிக்கு எதிரில் பேருந்து நிழற்குடை அமைக்க தமிழக வெற்றி கழகம் சார்பில் மறைமலைநகர் நகராட்சியில் அனுமதி கேட்டு தவெகவினர் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனுவை பெற்றுக்கொண்ட மறைமலைநகர் நகராட்சி அலுவலர்,’’நகராட்சி ஆணையரிடம் உங்களுடைய மனு அனுப்பப்பட்டுள்ளது. பரீசீலனைக்கு பிறகு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் தவெக சார்பில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பணி தீவிரமாக நடந்து முடிந்து திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் நகராட்சி அதிகாரிகள் , நிழற்குடையை அகற்றியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தவெகவினர் செங்கல்பட்டு 
மாவட்ட செயலாளர் மோகன்ராஜா தலைமையில் நகராட்சி அதிகாரிகளுடன் கடும்  வாக்கு
வாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் தவெகவினரிடம் சமரசம் பேசி நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து உங்களது கோரிக்கையை எடுத்துக்கூறி முறையான அனுமதியினை பெற்று பேருந்து நிழற்குடை அமையுங்கள் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நகராட்சி அதிகாரிகளுடன் தவெகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram