TTV Dhinakaran on ADMK : ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTV

மீண்டும் மோடி வருவார் என்று எனக்கு முன்பே தெரியும் - திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியின்  இல்ல திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன்
செய்தியாளர்களுக்கு  பேட்டி  அளித்தார்.

கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என கூறப்படுகிறது. 3 வது முறை மோடி ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே தெரியும். 4 ஆம் தேதி எல்லாம் தெரிந்து விடும். அதன்  பிறகு உண்மை என்ன உங்களுக்கு தெரிந்து விடும். கருத்துக்கணிப்பின்படி அதிமுக எதிர்பார்த்த தொகுதியில் வெற்றி  கிடைக்கவில்லை. 

தலைமையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு..

தேர்தல் முடிந்தவுடன் அதைப் பற்றி பேசலாம் இந்த நேரத்தில் கருத்துக்களை பேச முடியாது என்றார். 

அதிமுக உங்கள் கட்டுப்பாட்டில் வருமா என்ற கேள்விக்கு,...

அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும்  ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான்  என்னுடைய நம்பிக்கை. 

கடைசி கட்டமாக அரசியலில் ஆயுதமாக ஆன்மீகத்தை பயன்படுத்துகிறார்களா என்ற கேள்விக்கு,...

நான் எல்லா கோயிலுக்கு செல்வேன் மற்ற தலைவர்கள் கோவிலுக்கு செல்வது பற்றி பேசுவது மரியாதையாக இருக்காது என்றார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola