TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி

Continues below advertisement

’’எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் நான் தேர்தலை சந்திக்கமாட்டேன் சட்டமன்றத்திற்கும் செல்லமாட்டேன்….நான், அண்ணாமலை, ஓபிஎஸ், அன்புமணி இந்த நாலு பேர் தான் எடப்பாடி பழனிச்சாமியில் அரசியல் எதிரிகள்…எங்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க திமுகவுடன் எடப்பாடி ரகசிய கூட்டணி வைத்து செயல்படுகிறார்’’ என ஈபிஎஸ் மீது டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வரும் நிலையில், எப்படியாவது அரியணை ஏறி விடவேண்டும் என எதிர்க்கட்சிகள் முட்டிமோதி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்தித்தது. அதன்பிறகு மாநில தலைவர் அண்னாமலையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு பலம்வாய்ந்த கூட்டணி அவசியம்.  மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி நோ சொல்லிவிட்டார். ஆனால் பாஜக தரப்பில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனிடம் பாஜக தலைமை இந்த டாஸ்க்கை கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அதில் பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக நிர்வாகிகள் விரும்புகின்றனர். ஆனால்
எடப்பாடி பழனிச்சாமி தனது சுய லாபத்திற்காக கட்சியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனித்து செயல்படுகிறார். எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார். அவருக்கு அரசியல் எதிர்கள் நான்கு பேர்..நான், அண்ணாமலை, ஓபிஎஸ், அன்புமணி எங்களை வரவிடக்கூடாது என்பதற்காக திமுகவுக்காக ஆதரவாக செயல்படுகிறார்.

எனக்கு அதிமுகவில் மூத்த நிர்வாகி முதல் அடிமட்ட தொண்டர் வரை ஸ்லீப்பர் செல்ஸ் உள்ளனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகின்றனர். 
ஒருவேளை எடப்பாடி திருந்தவில்லை என்றால் அவரை அவர்களே திருத்துவார்கள்..எடப்பாடியே இல்லாத அதிமுக பாஜக கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் நான் தேர்தலை சந்திக்கமாட்டேன் சட்டமன்றத்திற்கும் செல்லமாட்டேன் என நேரடியாக தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் தினகரன்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram