USA-வில் 12 நாடுகளுக்கு தடை லிஸ்டில் இந்தியா? மாணவர்களை பந்தாடும் ட்ரம்ப் | Trump Travel Ban

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர 12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு புதிய விதிகள் சிலவற்றை அமல்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் நுழை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆஃப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, கயானா, எரிட்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியதாக தெரிவால், குறிப்பிட்ட 12 நாடுகள் மீது இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் 7 நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிகளின்படி, புருண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தாலிபான்கள் தலைமையிலான அரசு நடைபெறுவதால் ஆஃப்கானிஸ்தான், அரசு ஆதரவில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவாதால் ஈரான், மற்றும் கியூபா, விசா கட்டுப்பாடுகளை மீறி வசிப்பதன் காரணமாக சடி மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக, தனது முதல் ஆட்சிக் காலத்திலும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வார ட்ரம்ப் தடை விதித்து இருந்தார். ஆனால், அந்த உத்தரவு ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான், மீண்டும் பல நாடுகளுக்கு ட்ரம்ப் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 

நல்வாய்ப்பாக இந்த கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. அதேநேரம், ட்ரம்ப்பின் தொடர் அதிரடி நடவடிக்கைகளால், அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்கள் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். எப்போது? என்ன நடக்கும் என்ற அச்சம் அவர்களை தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பல மாணவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பது. ஆனால், அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ட்ரம்பின் உத்தரவை நிறுத்திவைத்துள்ளது.

மிகவும் பின்தங்கியுள்ள ஆஃப்ரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவ இளைஞர்கள், தரமான கல்வியை பெற்று வாழ்வில் உயர்ந்திடமாட்டோமா? என்ற நோக்கிலேயே அமெரிக்காவை நோக்கி பயணிக்கின்றனர். ஆனால், ட்ரம்பின் நடவடிக்கையால் அந்த வாய்ப்புகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola