கொளுத்திப் போட்ட டிரம்ப்உண்மை தெரியணும் மோடிராகுல், சு.சுவாமி போர்க்கொடி

இந்தியா பாகிஸ்தான் தாக்குதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதுதகவல் ஒன்றை சொல்லி பரபரப்பை கிளப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதனை வைத்து ராகுல் காந்தி, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை நெருக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததே நான் தான், அமெரிக்கா மட்டும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி வருகிறார். அதுமட்டுமில்லாமல் போரை நிறுத்தவில்லையென்றால் உங்களுடன் வணிகம் செய்ய மாட்டோம் என மிரட்டி தான் பேச்சுவார்த்தையை முடித்ததாகவும் சொன்னது பரபரப்பை கிளப்பியது. பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தான் சுயமாக முடிவெடுத்ததாகவும், இதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் அதிபர் ட்ரம்ப் இதை பற்றி பேசுவதை நிறுத்தவில்லை. குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு விருந்தளித்தார். அப்போது இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக புது தகவல் ஒன்றை சொல்லியுள்ளார்.

நாங்கள் நிறைய போர்களை நிறுத்தியுள்ளோம்

இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டிருந்தன

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நினைக்கிறேன்

இவை இரண்டும் தீவிர அணுசக்தி நாடுகள்

2 நாடுகளும் மோதிக் கொண்டிருந்தன

 உங்களுக்குத் தெரியுமா, இது புதிய வகையான போர் போல் இருந்தது 

சமீபத்தில் ஈரானில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை பார்த்திருப்பீர்கள்

 அவர்களின் அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாகத் அழித்தோம்

அதேபோல் இந்தியாவும் பாகிஸ்தானும் அதை தான் செய்து கொண்டிருந்தன

பிரச்னை பெரிதாகிக் கொண்டிருந்தது

வர்த்தகத்தின் மூலம் தான் நாங்கள் தாக்குதலை நிறுத்தினோம்

நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அணு ஆயுதங்களைச் தூக்கி வீசுங்கள் என சொன்னோம்

இரண்டும் சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகள்

அதிபர் ட்ரம்ப்பின் பேச்சை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை அட்டாக் செய்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் மோடி ஜி, 5 ஜெட் விமானங்கள் பின்னணியில் உள்ள உண்மை என்ன? தேசம் அதை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வரும் சுப்ரமணியன் சுவாமியும், ட்ரம்ப்பின் பேச்சை வைத்து மோடியை விமர்சித்துள்ளார். உங்களுக்கு எதிராக ட்ரம்ப் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள் மோடி. இது யாருடைய அரசாங்கம் என விமர்சித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola