Trisha Political Entry | ”CM ஆகி காட்டுகிறேன் ”தவெக-வில் இணையும் த்ரிஷா? வைரலாகும் வீடியோ! | Vijay

நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில் ஒரு நேர்காணலில் எனக்கு CM ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. நீங்க வேணா பாருங்க 10 வருஷத்துல CM ஆகி காட்டுகிறேன் எனப் தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. விஜய் ஆரம்பித்த தவெக கட்சி மூலம் த்ரிஷா தனது அரசியல் ஆசை மற்றும் கனவை நிறைவேற்றி கொள்ளப்பேகிறாரா என்ற கேள்வி தீயாய் உலா வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 'ஜோடி' படத்தில் 1 நிமிட காட்சியில்  வந்து சென்றது தான் இவரின் அறிமுகம்.  அதுவும் ஹீரோயினாக நடித்த சிம்ரனுக்கு தோழியாக. இதை தொடர்ந்து  2ஆவது படமான 'மௌனம் பேசியதே' படம் தான் த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமாகிய படம்.

முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த த்ரிஷா அதன் பிறகு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய பல மொழி படங்களில் நடித்து மாஸ் ஹீரோயினாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் எந்தப் படமும் ஹிட் கொடுக்காத நிலையில் ஹீரோயினுக்கான கதைகளில் நடிக்க துவங்கினார். ஆனால், அந்தப் படங்களும் இவருக்கு பெரிதாக ஒர்க் அவுட்டாகவில்லை. பின் 96 படம் டர்னிங் பாய்ண்டாக அமைய அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பார்ட் 1 பார்ட் 2 அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இப்போது கைவசம் விடாமுயற்சி, குட் பேட் அக்லீ, தக் லைஃப், சூர்யா 45 ஆகிய படங்களிலும் ராம் என்ற மலையாள படத்திலும், விஸ்வம்பரா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு த்ரிஷாவிற்கு அதிக படங்களை கொடுக்கும் சூப்பரான ஆண்டாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் திரிஷா சினிமாவை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தனது அரசியல் பயனத்தை தொடங்க போவதாகாவும் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவியது. இதைதொடர்ந்து  த்ரிஷாவின் பழைய பேட்டியில் எனக்கு CM ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. நீங்க வேணா பாருங்க 10 வருஷத்துல CM ஆகி காட்டுகிறேன். நீங்க எல்லாரும் எனக்கு ஓட்டு போடுங்க என்று த்டிஷா அந்த பேட்டியில் பேசியுள்ளார். இதற்கு விஜய் ஆரம்பித்த கட்சி மூலம் த்ரிஷா தனது அரசியல் ஆசை மற்றும் கனவை நிறைவேற்றி கொள்ளப்பேகிறீர்களா என இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜய் தவெக-வில் த்ரிஷாவுக்கு முக்கிய பதவி கொடுக்க போவதாகவும் புஸ்ஸி ஆனந்த் பதவி காலி எனவும் வதந்திகள் பரவி வருகிறது. 

இந்தநிலையில் திரிஷவின் அம்மா இது தொடர்பாக கூறுகையில், திரிஷா அரசியலுக்கு வரப்போவதில்லை. உயிர் இருக்கும் வரை அவர் சினிமாவில் தான் இருப்பார். இது தொடர்பாக பரவி வரும் செய்திகள் எதுவும் உணமையில்லை என தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola