Palanivel Thiagarajan Performance Report : 6 மாதத்தில் இவ்வளவா? அசர வைத்த PTR

Continues below advertisement

Palanivel Thiagarajan Performance Report: தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்பட்டு வருகிறார். இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த காலம் தொட்டே தனது செயற்பாட்டு அறிக்கையை ஒவ்வொரு 6 மாதமும் தொகுதி மக்கள் பார்வைக்கு சமர்ப்பித்து வருகிறார். இந்நிலையில் இந்த முறை அவர் மாநிலத்தின் நிதிமைச்சராக உள்ளதால் தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மே 2021-நவம்பர் 2021க்கான செயல்பாட்டு அறிக்கையை வழங்கி வருகிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2016ம் ஆண்டு முதல் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக எனது செயல்பாட்டு அறிக்கையை ஒவ்வொரு 6 மாதமும் தவறாமல் சமர்ப்பிக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக மே 2021-நவம்பர் 2021க்கான அறிக்கை தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram