TN BJP LEADER NAINAR NAGENDRAN: டெல்லி பறந்த நயினார்!பாஜக தலைவர் UPDATE அமித்ஷா அறிவிப்பு? | BJP

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ள நிலையில், அந்த ரேஸில் முன்னிலையில் உள்ளதாக கூறப்படும்  நயினார் நாகேந்திரன் டெல்லி ப்யணம் மேற்கொள்ளப்போவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில், நயினாரின் டெல்லி பயணம் அடுத்த தலைவர் இவர்தான் என்பதை உறுதி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் வேலைகளில் களமிறங்கியுள்ளது. திமுகவை ஆட்சியை விட்டு அனுப்பி ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது அதிமுக. அதனால் கூட்டணி கணக்குகளை தொடங்கிய ஈபிஎஸ், பாஜக கூட்டணிக்கு செவிசாய்க்காமல் கறாராக இருந்து வந்தார். ஆனால் பாஜகவோ அதிமுக கூட்டணியை விரும்பும் நிலையில், எடப்பாடியை சமாதானம் செய்ய பல கட்ட பேச்சு வார்த்தைகளையும் நடத்தியது.

2021 தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த அதிமுக, அண்னாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,அதிமுக கூட்டணியை சாத்தியப்படுத்துவதற்கு அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து இறக்கவும் பாஜக தலைமை தயாராகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்ட நிலையில், அண்ணாமலையை தூக்கிவிட்டு அதிமுகவுடன் இணக்கமாக போகக் கூடிய ஒருவரை தலைவர் ஆக்கலாம் என நினைப்பதாக சொல்லப்பட்டது. 

தற்போது அண்ணாமலையே தான் மாநில தலைவராக தொடரப்போவதில்லை என நேரடி ஹிண்டும் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தான் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ஏற்கனவே மாநில தலைவர் ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் இருப்பதாக பேச்சு அடிபட்டது. இந்தநிலையில் அதிமுக கூட்டணிக்காக நயினார் நாகேந்திரனை தலைவராக்குவதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் அனைத்து கட்சிகளும் தென் மாவட்டங்களை குறிவைத்தே காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படும் நிலையில்,  வாக்கு வங்கி அரசியலுக்காக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்கலாம் என்று பாஜக மேலிடம் கருதுவதாகவும் பேசப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், தனக்கே தலைவர் பதவி கிடைக்கும் என நயினார் நாகேந்திரனும் காலரை தூக்கிவிட்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் முனுமுனுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி விஜயம் செய்துள்ளது இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவே அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola