MK Stalin: நீங்க கேட்டிங்க, நான் செய்கிறேன் பயப்படாதிங்க பழனிசாமி - ஸ்டாலின் | MK Stalin | kodanad Issue | ADMK
சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,
‛‛முறைப்படி அனுமதி பெற்று தான் விசாரணை நடக்கிறது. இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதை போல் அதிமுகவினர் நடந்து கொண்டனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். விசாரணையில் எந்த அரசியல் தலையீடும் இருக்கப் போவதில்லை. எனவே பயப்படத் தேவையில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாமல் எங்கள் மீது குறி வைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். கோடநாடு விவகாரமும் தேர்தல் அறிக்கையில் கூறியது தான். இதுமட்டுமல்ல இன்னும் பல இருக்கிறது என முதல்வர் பேசினார். முதல்வரின் இந்த பேச்சுக்கு மேஜையை தட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.