Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள தேவஸ்தான தலைவர் பி ஆர் நாயுடு கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த கோவிலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தற்போது கவனித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த லட்டு சட்டையால் ஏற்கனவே இருந்த தேவஸ்தான நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய தேவஸ்தான நிர்வாகம் மற்றும் அறங்காவலர் களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளார்.
24 உறுப்பினர்களைக் கொண்ட இந்த புதிய குழுவின் தலைவராக பி ஆர் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய உறுப்பினர்கள் குழுவில் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான சுசித்ரா எல்லாவும் ஒருவராவார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தேவஸ்தான தலைவர் பி ஆர் நாயுடு முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் இந்திய அரசாங்கத்துக்கு நன்றி நன்றி தெரிவித்துள்ளார் மேலும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் கோவிலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதனை அதனை சரி செய்து கோவில்புனிதத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என்பது தான் எனது முதல் முயற்சி என்று தெரிவித்திருந்தார். மேலும் இதில் பல பல சிக்கல்கள் உள்ளதாகவும் வேறு மதங்கள் சேர்ந்த ஊழியர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் பேசி கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர்களுக்கு விஆர்எஸ் வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என்பதையும் அவருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார் மேலும் பல்வேறு துறைகளுக்கு அவர்களை மறுசீரமைப்பு குறித்தும் ஆலோசித்து வருவதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பி ஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரி ஊழியர்கள் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று தேவஸ்தான தலைவர் தற்போது தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.