Tirupati Laddu History | திருப்பதி கோயிலில் NON-VEG லட்டு!நடந்தது என்ன?

Continues below advertisement

அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 27 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல்வேறு கட்ட மோதலுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் அப்போது முதல் உறுதுணையாக இருந்து வருபவர்.

பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. 2011-16-ல் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது 27 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2015-16 காலகட்டத்தில் ஸ்ரீராம் குழுமம் நிறுவனத்தின் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

2013-ல் ஸ்ரீராம் குழுமம் விண்ணப்பித்த நிலையில் 2 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை. 2016-ல் திடீரென அனுமதி வழங்கியதன் மூலம் பெருமளவு லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் குழுமத்தின் பாரத் கோல் கெமிக்கல் நிறுவனத்தின் மூலம் வைத்தியலிங்கத்தின் மகன்கள் இயக்குநர்களாக உள்ள முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்துக்கு லஞ்சம் கைமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ.27 கோடி லஞ்சம் கடனாக வழங்கப்பட்டது போல் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வைத்திலிங்கம், அவரது மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram