திருவாரூர் பேருந்து நிலையம் கலைஞர் நகர பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் | Thiruvarur | Buses |
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நகர பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று பேருந்து சேவை தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, இளைஞர் அணியை சேர்ந்த ரஜினிசின்னா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.