Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

Continues below advertisement

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபம் ஏற்ற காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்ய கோரியும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்றிவிட்டு நாளை தீபம் ஏற்றியதை அடுத்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் திருப்பரங்குன்றத்திற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, 

துரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை இதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து உள்ளே வந்ததால் காவல்துறையினருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீபத்தூணில் மனுதாரர் 6 நபர்களுடன் சென்று தீபம் ஏற்றலாம் எனவும் அதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்களுடன் தீபத்தூணிற்கு சென்று தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பிற்காக 62 CISF படையினர் மலைப்பாதை பகுதிக்கு வருகை தந்தனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன்  CISF படையினர் மலை மேல் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola