Thirumavalavan : விஜய் வந்தா நான் வரல” திருமா Condition.. ஆதவ் Shocked.. பின்னணியில் ஸ்டாலினா?
விஜய் உடன் இணைந்து, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்பார் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதால் திருமா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விகடன் நிறுவனம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற நூல் வெளியீட்டு விழாவை நடத்த இருக்கிறது. இந்த நூலின் இணை பதிப்பாளர் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ எனும் தேர்தல் வியூக நிறுவனமாகும். வி.சி.க-வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இச்சூழலில் தான் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய் உடன் சேர்ந்து வி.சிக. தலைவர் திருமாவளவன் பங்கேற்பார் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதே நேரம் திமுக கூட்டணியில் முக்கிய பங்காற்றும் வி.சி.க .. திமுக விற்கு எதிரான அரசியலை கையில் எடுத்து இருக்கும் தவெக உடன் மேடையை பகிர்ந்து கொள்வது திமுக தலைமைக்கு பிடிக்க வில்லை என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இது விவாதத்திற்கு உள்ளான சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவே இந்த விழாவுக்கு தன்னை அழைத்ததாகவும் ,அப்போதே விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக திருமா கூறினார். இச்சுழலில் ஏற்கனவே கலந்துகொள்ள ஒப்புதல் கொடுத்திருந்த திருமாவளவன், தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வதால், தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த நேரத்தில் நீங்கள் விஜய்யோடு கலந்துகொண்டால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று கூறியதாகவும் இதானல், டிசம்பர் 6 நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாவும் கூறப்படுகிறது. திமுக உடன் கூட்டணியில் இருக்கும் திருமா இது போன்ற விசயங்களில் அவர் தானோ முடிவு எடுக்க வேண்டும் எல்லாவற்றிற்கும் திமுக சொல்வதை தான் கேட்கிறார் என்று வருத்தத்தை பதிவு செய்கின்றனர் விசிகவினர்.